தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?

Wednesday, July 8, 2009

முதலில், தனித்தளம் தொடங்க தேவையானவை இரண்டு:

1. ஒரு தள முகவரி (Domain name)
2. வலையிட வழங்கி (Web space hosting)

இவ்விரண்டையும் எங்கு பெறுவது?

Godaddy போன்ற தளங்களில் மேற்கண்ட இரண்டு சேவைகளுக்கும் பதிந்து கொள்ளலாம். இல்லை, domain registration, web hosting என்று கூகுளில் தேடினால் பல முடிவுகள் கிடைக்கும். அல்லது, தமிழ் வலைப்பதிவுலகில் தனித்தளம் வைத்திருப்பவர்கள் பட்டியலை இந்தப் பதிவிலும் அதற்கு வந்த பின்னூட்டங்களிலும் காணலாம். அவர்களில் உங்கள் நண்பர்களை அணுகியும் அவர்கள் பயன்படுத்தும் சேவை குறித்து அறியலாம்.

இவற்றைப் பெறுவது எளிதா?

ஒரு மின்மடல் கணக்கு தொடங்குவது போல் எளிதாகச் செய்யலாம். நுட்ப அறிவு தேவை இல்லை.

இவற்றைப் பதிய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். தளம் பொதுப் பார்வைக்கு வர ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி வரலாம். இது எல்லாருக்கும் வரும் வழமையான தாமதமே.

எவ்வளவு செலவாகும்?

தளப் பெயர் பதிய ஆண்டுக்கு குறைந்தது 300 இந்திய ரூபாய் செலவாகும். வலையிட வழங்கியின் சேவையைப் பெறுவதற்கு ஆண்டுக்குக் குறைந்தது 150 இந்திய ரூபாயே கூட போதும். என்னுடைய வலையிட வழங்கி எனக்கு ஆண்டுக்கு 100 MB இடமும் மாதத்துக்கு 1 GB தரவுப் பரிமாற்ற அளவும் வழங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 1,000 இந்திய ரூபாய் செலவிடுகிறேன். எனினும், இதை விட விலை குறைவாகவும் இடம் அதிகமாகவும் பல சேவைகள் இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். எவ்வளவு இடம் வேண்டும் என்பதை உங்கள் பதிவின் அளவு, நீங்கள் சேமித்து வைக்கும் ஒலி, ஒளிக்கோப்புகளின் அளவு, வாசகர் வருகை அளவு பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

எப்படி பணம் கட்டுவது?

பன்னாட்டு நிறுவனச் சேவைகள் கடன் அட்டை, Paypal மூலமே பணம் பெற்றுக் கொள்ளும். சேரும் போதே இத்தனை ஆண்டுகளுக்குத் தேவை என்று சொன்னால் அதுவே ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளும். இல்லையென்றால், நீங்கள் நினைவு வைத்து ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வலையிட வழங்கிச் சேவைகள் இந்திய வங்கிக் கணக்குகள், காசோலைகள், money orderகள் மூலமோ நேரடியாக காசாகப் பெற்றுக் கொண்டோ கூட இந்த சேவையை அளிக்கலாம். கடன் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த வசதி உதவும். எடுத்துக்காட்டுக்கு, http://www.webspace2host.com கடன் அட்டை இல்லாமலும் பணம் செலுத்தும் வசதிகளை அளிக்கிறது.

வலையிட வழங்கிக்குச் செலவு செய்யாமல் தனித்தள முகவரியில் பதிவிட முடியுமா?

முடியும். தளப் பெயரை மட்டும் பதிந்து கொண்டு ப்ளாகர் தரும் இலவச இடத்திலேயே உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த முடியும். எடுத்துக்காட்டுக்கு, http://blog.arutperungo.com/ பாருங்கள். இது குறித்த ப்ளாகர் உதவிக் குறிப்பைப் பாருங்கள். ப்ளாகரின் வசதிகள், இடைமுகப்பு பிடித்துப் போய் வேறு சேவைகளுக்கு மாற விரும்பாதவர்கள் இதைப் பயன்படுத்தலாம். எனினும், இந்த இலவச சேவையில், உங்கள் பதிவு முகவரி, தளத்தில் பிற சேவைகள் நிறுவுவது குறித்த கட்டுப்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, சொந்தமாக வலையிட வழங்கிச் சேவை பெற்று அங்கிருந்தும் ப்ளாகர் மூலம் பதியலாம்.

தனித்தளத்தில் வலைப்பதிய உகந்த மென்பொருள் எது?

தனித்தளத்தில் வலைப்பதிய பலரும் பரிந்துரைக்கும் மென்பொருள் Wordpress. இது ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதால் இலவசமாக நிறுவிக் கொள்ளலாம். இதை நிறுவிக் கொள்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் தளத்தின் கட்டுப்பாட்டகத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு 5 நிமிடங்களுக்குள் நிறுவிக் கொள்ளலாம். ப்ளாகருக்குப் பழகியவர்கள் wordpress இலகுவா என்று தயங்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரம் துழாவிப் பார்த்தாலே wordpress இயங்கும் முறையைப் புரிந்து கொள்ளலாம்.

தனித்தளத்துக்கு என் பழைய இடுகைகளை இடம்பெயர்க்க இயலுமா?

முடியும். ப்ளாகர், wordpress.com போன்ற சேவைகளில் உங்கள் இலவச வலைப்பதிவுகளில் உள்ள இடுகைகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை இடம்பெயர்த்து உங்கள் பதிவில் இடலாம். இதைச் செய்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் பதிவின் அளவைப் பொறுத்து 5 முதல் 30 நிமிடங்கள் ஆகலாம்.

தனித்தளத்தில் பதிந்தால் திரட்டிகளில் இணைய முடியுமா? தமிழ்மணத்தில் பின்னூட்டம் திரட்டடப்படுமா?

முடியும். தனித்தளத்தில் wordpress நிறுவிச் செயல்படுபவர்களுக்கான கருவிப்பட்டையைத் தமிழ்மணம் வழங்குகிறது. இதை இலகுவாக சேர்த்துக் கொள்வதற்கான பொருத்தை இங்கு பெறலாம். இதனால், தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் திரட்டப்படுவதிலும் பிரச்சினை இருக்காது.

தனித்தளத்தில் வலைப்பதிவதால் என்ன இலாபம்?

சொந்த வீட்டில் இருக்கும் ஒரு சந்தோஷம், அடையாளம் தான் :) உண்மையில், தனித்தளத்தில் பதிவதால் உங்கள் பதிவு மீதான கூடுதல் கட்டுப்பாடு உங்களுக்குக் கிடைக்கும். எரிதப் பின்னூட்டங்கள், விரும்பத் தகாத பின்னூட்டங்களைத் தவிர்க்கலாம். வாசகர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எப்பொழுது வருகிறார்கள், எதைப் படிக்கிறார்கள், எவ்வளவு நேரம் தங்குகிறார்கள் போன்ற துல்லியமான புள்ளி விவரங்கள் கிடைக்கும். வலைப்பதிவு போக பிற மென்பொருள்கள், சேவைகளை உங்கள் தளத்தில் நிறுவிப் பார்க்கலாம். வலைமனையாகவும் பயன்படுத்தலாம். நிறுவனங்கள் வைத்திருப்போர் தங்கள் நிறுவனத்துக்கான வலைப்பதிவை சொந்தத் தளத்தில் நிறுவுவது கூடுதல் நம்பகத்தன்மையையும் தோற்றத்தையும் தரும். உங்கள் பெயரில் அமைந்த தனி மின்மடல் முகவரியும் கிடைக்கும்.

- ரவி

Read more...

பிளாக் உருவாக்குவது எப்படி ?

Sunday, July 5, 2009

பிளாக் உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி உங்களுக்கான வலைப்பூவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

1. முதலாவதாக வலைப்பூ சேவைதரும் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் யாவும் பிளாக்ஸ்பாட்டை அடிப்படையாக கொண்டது. ஆதலால் http://www.blogger.com/ என்னும் தளத்திற்கு செல்லுங்கள். கீழ்கண்ட பக்கத்தை காணலாம்.

2. உங்களுக்கு கூகிள் பயன்பாட்டாளர் பெயர் இருப்பின் கடவுச்சொல்லை இட்டு உள்ளே செல்லலாம். பயன்பாட்டாளர் பெயர் இல்லாதிருப்பின் உங்களுக்கு உருவாக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் கட்டமிடப்பட்ட CREATE YOUR BLOG சொடுக்கவும்.


3. ஏற்கனவே பயன்பாட்டாளர் பெயர் இருப்பின் sign in first சொடுக்கி login செய்யவும். கூகிள் பயன்பாட்டாளர் பெயர் இல்லாதிருப்பவர்கள் மேலே கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து உருவாக்கிக் கொள்ளவும்.

4. ஏற்கனவே வைத்திருப்பவர்கள் sign in first சொடுக்கி பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை இட்டு sign in செய்யவும்.

5. அடுத்ததாக பிளாக்கின் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பிளாக்கின் பெயர் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பானதாக அமைவது அவசியம். அதாவது பிளாக்கின் பெயர் UNIQUE ஆக இருக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் பெயர் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். BLOG address ஐ கொடுத்து Check Availablity ஐ சொடுக்கும் போது நீங்கள் கொடுக்கும் பிளாக் முகவரி இருந்தால் The blog address is available என்னும் சொல்லைக் காணலாம். நீங்கள் விரும்பும் தலைப்பை இல்லையெனில் வார்த்தைகளை மாற்றி அமைத்தோ அல்லது -, . போன்றவற்றை பயன்படுத்தியோ பிளாக் முகவரியை நிறுவலாம்.

6. அடுத்தாக பிளாக் டெம்ப்ளேட்டை தேர்வு செய்ய வேண்டும். வித்தியாசமான வடிவங்களில், வண்ணங்களில் அமைந்துள்ள டெம்ப்ளேட்டுகளை உங்களின் ரசனைக்கேற்ப தேர்வு செய்து CONTINUE ஐ சொடுக்குங்கள்.

7. உங்களுக்கு Your blog has been created! என்னும் சொல் வரும். அடுத்ததாக START BLOGGING என்னும் பட்டனை சொடுக்கி பதிவுகளை இடும் பக்கத்திற்குச் செல்லலாம்.

8.கீழே கொடுக்கபபட்டுள்ள பக்கங்களில் நீங்கள் பதிவிடுவதற்கான கருவிகள் உள்ளன. எழுத்துகளை வடிவமைக்க Font, Bold, Color, Italic, Text alignments left, right, center, justify, Spelling Check, Eraser, Language tool, Bullets, Numbering போன்ற கருவிகளைக் கொண்டு சிறப்பாக வடிவமைக்கலாம்.
Post பாகத்தின் மேல் பக்கத்தில் Edit Html மற்றும் Compose என்னும் இரண்டு வகைகள் உள்ளன. இதில் Edit HTML முறையில் உங்களால் html coding கொண்டு பதிவுகளை வடிவமைக்க முடியும். Compose முறையில் உங்களால் நேரடியாக போஸ்ட் கருவி கொண்டு வடிவமைக்க முடியும்.

9. PUBLIC POST சொடுக்கிய பின் மேலே கண்ட தகவலைக் காணலாம். View Blog சொடுக்கியும் பிளாக்கை காணலாம். உங்களுடைய பிளாக் கீழ்கண்டவற்றைப் போன்று காணப்படும்.

10. உங்களுடை பிளாக் பக்கத்தின் வடது மூலையில் New Post, Customize ஐ சொடுக்கியும் உங்களால் வடிவமைக்கும் பகுதிக்குச் செல்ல முடியும்.

Read more...

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Sunday, June 28, 2009

  1. NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.




Click here to download NHM Writer



image

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image

4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

image

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP